விஐடி பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் அணைக்கட்டில் நேற்று முன்தினம் நடந்தது. விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, ஒன்றிய குழு தலைவர்கள் பாஸ்கரன், வெங்கடேசன், குமர பாண்டியன், ஊராட்சி தலைவர் செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விஐடி நாட்டு நல பணித்திட்ட அலுவலர் காயத்ரி வரவேற்றார். என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் ஜெயகிருஷ்ணன் முகாமின் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார். எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
முகாமை விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது: நாட்டு நலப்பணி திட்ட முகாம் இந்த ஆண்டு அணைக்கட்டு தொகுதியில் நடைபெறுவது மகிழ்ச்சி. கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர் களை உயர்த்தும் சேவை தான் நாட்டு நலப்பணித்திட்ட முகாம். இந்தியாவில் 30 சதவீதம் பேர் தான் நகரங்களில் உள்ளனர். 70 சதவீதம் பேர் கிராம புறங்களில் தான் வாழ்ந்து வருகின்றனர். கிராமங்கள் வளர்ந்தால் தான் இந்தியா வளர முடியும். ஓரளவிற்கு கிராமங்கள் வளர்ந்துள்ளது. பெருநகரங்களோடு போட்டி போடும் அளவுக்கு கிராமங்கள் வளர வேண்டும். ஏழை மாண வர்கள் 9,400 பேருக்கு நம் அறக்கட்டறை மூலம் பல்வேறு உதவிகள் செய் யப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.
முன்னதாக எம்எல்ஏ நந்தகுமார் பேசுகையில், “விஐடி வேந்தர் போன்ற மனிதரை பார்க்க முடியாது. இவர் அணைக் கட்டு தொகுதியில் மலை கிராம பள்ளிகள், கிராமங்களை தத்தெடுத்து வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும்“ என்றார். இதில் மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணன் மேனன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுரேஷ், துரை பாபு, மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.