ஸ்ரீ ராம கிருஷ்ணா பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.இ.சி ஸ்பார்க் இன்குபேஷன் பவுண்டேஷன் மற்றும் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து இன்னோவேஷன் வவுச்சர் ப்ரோக்ராம் பண்ட்ஸ் ஸ்டார்ட் அப் சக்ஸஸ்க்காண சிறந்த வழிகாட்டி என்ற தலைப்பில் பயிலரங்கு நடைபெற்றது.
விழாவை கல்லூரி முதல்வர் ஏ.சௌந்தரராஜன் வரவேற்றுப் பேசினார். எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் கல்வித்துறை இயக்குநர் என்.ஆர்.அலமேலு தலைமை வகித்தார்.
சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட உற்பத்தி திறன் மேம்பாட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் இன்குபேஷன் சென்டர் நிறுவுவது பற்றியும் தமிழ்நாடு அரசிடம் தொழில் தொடங்க நிதி பெறுவது பற்றியும் கலந்துரையாடல் மூலம் பகிர்ந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன திட்ட அலுவலர் காயத்திரி கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை முன் வைத்தார்.
இவ்விழாவில், கல்லூரியின் தொழில் துறை தலைவர் கணேஷ் , எஸ் ஆர் இ சி ஸ்பார்க் இன்குபேஷன் பவுண்டேஷன் தலைமை இயக்க அதிகாரி ஷர்மிளா, இன்குபேஷன் மேலாளர் திருக்குறள் கனி , தொழில்நுட்ப வல்லுநர்கள், பல்வேறு துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.