வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1954-55ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்வில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
இதில் விஐடி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமை தாங்கி பேசுகையில்,
“கவுண்டன்யா மகாநதி ஆற்றில் எப்போதும் தண்ணீர் சென்று கொண்டிருக்கும். ஆற்றுக்கு அந்த புறம் கடக்க முடியாததால் மாணவர்களுக்காக நெல்லூர்பட்டை பள்ளி உருவானது” என்றார்.
விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்களுக்கு விசுவநாதன் சால்வை அணிவித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இற்கான ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி செல்வராஜ் செய்தார். நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ சேகு தமிழரசன் பேசினார். இதில் பேராசிரியர் சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டார்.
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்கள் வினாயகம், திருநாவுக்கரசு, ஆசிரியர்கள் நாராயணகீதா, வள்ளலார் பள்ளி தாளாளர் மீரா, முன்னாள் மாணவர்கள் சங்கத்தலைவர் சடகோபன், நடுபேட்டை அரசு பள்ளி பி.டி தலைவர் அமர்நாத், நகராட்சி கவுன்சிலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெகதீசன் வரவேற்றார்.
குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன், நகர்மன்ற தலைவர் சவுந்தராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, முன்னாள் சபாநாயகர் தமிழரசன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி செல்வராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். முடிவில் கேசவன் நன்றி கூறினார்.