fbpx
Homeபிற செய்திகள்கோவையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 89வது நிறுவன தினம் கொண்டாட்டம்- வாகனம், வீட்டுக் கடன்களுக்கு சலுகை...

கோவையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 89வது நிறுவன தினம் கொண்டாட்டம்- வாகனம், வீட்டுக் கடன்களுக்கு சலுகை அறிவிப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 89வது நிறுவன தின விழா, கோவை பிராந்திய அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் வங்கியின் நிறுவனத் தலைவர் எம்.சிடி.எம் சிதம்பரம் செட்டியாரின் உருவப்படத்திற்கு கோவை மண்டலத்தின் முதன்மை பிராந்திய மேலாளர் கே.வேலாயுதம் மலர் தூவி மரியாதை செலுத்தியதோடு, நாட் டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்தார்.

விழாவில் முதன்மை பிராந்திய மேலாளர் கே.வேலாயுதம் பேசியதாவது: நிறுவன தினத்தையொட்டி கோவை, திருப் பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஐஓபியின் பல்வேறு கிளைகளிலும் கண் பரிசோதனை முகாம்கள் மற்றும் ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நிறுவன நாளை முன்னிட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 31.03.2025 வரை வீட்டுக் கடன்கள் மற்றும் வாகனக் கடன்களுக்கு செயலாக்கக் கட்டணங்களை ரத்து செய்து அறிவித்துள்ளது.

இலவச காப்பீட்டுத் தொகை மற்றும் சர்வதேச விமான நிலைய ஓய்வறை அணுகல் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுடன் அல்ட்ரா எச்என்ஐ சேமிப்பு வங்கி கணக்குத் திட்டத்தையும் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐஓபியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் அனைத்து
வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்கள், பங்குதா ரர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவையொட்டி, வங்கியின் பிராந்திய அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.

படிக்க வேண்டும்

spot_img