பேங்க் ஆப் மகாராஷ்டிரா கோவை மண்டலத்தின் 45வது கிளையாக ஓமலூர் கிளை உதயமாகி உள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்கா, மேச்சேரி பிரிவு, இந்திரா நகர் விகேஎஸ் வளாகத்தில் இந்த புதிய கிளையை மேட்டூர் சார் ஆட்சியர் நே.பொன்மணி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அருகில் ஓமலூர் வட்டாட்சியர் சி.ரவிக்குமார், வங்கியின் கோவை துணை மண்டல மேலாளர் ஆர்.ராஜூ, மண்டல அலுவலக முதுநிலை மேலாளர் எஸ்.விக்னேஷ், கிளை மேலாளர் தாசையா அமர்லபுடி ஆகியோர் உள்ளனர்.