fbpx
Homeபிற செய்திகள்போதைப்பொருள் தடுப்பு பேரணி: துண்டு பிரசுரங்கள் வழங்கி நீலகிரி மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு

போதைப்பொருள் தடுப்பு பேரணி: துண்டு பிரசுரங்கள் வழங்கி நீலகிரி மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறையின் சார்பில் நீலகிரி மாவட்டம் உதகை ரயில் நிலைய முகப்பிலிருந்து மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மதுவிலக்கு மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்களை ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இப்பேரணியானது, ரயில் நிலைய முகப்பிலிருந்து துவங்கி, கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் வழி யாக சென்று பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நிறைவு பெற்றது. இதில் சுமார் 300 மாணவ, மாணவியர்கள் பல்வேறு விழிப்புணர்வு பதாகை களை கையில் ஏந்தியபடி, பேரணியில் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இப்பேரணியில், உதவி ஆணையர் (கலால்) தனப்பிரியா, உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ், உதகை வட்டாட்சியர் சங்கர்கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img