fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா பாராமெடிக்கல் சயின்ஸ் மாணவர்களின் தீப ஒளி ஏற்றும் விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாராமெடிக்கல் சயின்ஸ் மாணவர்களின் தீப ஒளி ஏற்றும் விழா

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவ மனை வளாகத்தில் உள்ள ஸ்ரீமதி வேலுமணியம்மாள் மெமோரியல் ஹாலில் ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் பாரா மெடிக்கல் சயின்சஸ் கல்லூரி செவிலியர்களால் தீப ஒளி ஏற்றும் விழா கொண்டாடப்பட்டது.

இதில் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.கிரி ஜாகுமாரி வரவேற்று பேசினார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில், “செவிலியர் தொழிலில் நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை அவசியம்“ என்றார்.

தொடர்ந்து முதலாம் ஆண்டு (2024-2025) செவிலியர் மாணவர்கள் அகல் விளக்கேற்றினர். பின்னர் முதன்மை செவிலியர் அதிகாரி கிரிஜா உறுதி மொழியை வாசிக்க மாணவர்கள் உறுதி மொழி ஏற்றனர்.

நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக பேராசிரியர் டாக்டர்.ஜெனிகெம்ப் கலந்து கொண்டு வருங்கால செவிலியர்கள் நர்சிங் துறையில் தங்கள் வளர்ச்சிக்கான ஒவ் வொரு வாய்ப்பையும் ஏற்றுக் கொள்ளுமாறு ஊக்குவித்தார்.

தொடர்ந்து மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர், மருத்துவக் கண்காணிப்பாளர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சி.ஏ.ஓ ஆகி யோர் முன்னிலையில் விழா நடைபெற்றது.

நிறைவாக துணை முதல்வர் டாக்டர்.காஞ்சனா நன்றியுரை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img