சேலம் மாவட்டம், மேச்சேரி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி செய்தியாளர் பயணத் தின்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களி டம் கூறியதாவது:
பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழ்நாடு அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறது.
இத்தகைய திட்டங்கள் தரமாகவும், உரிய கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதை உறுதி செய்திடும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டம், மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 3லு ஆண்டுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், பள்ளிகள் உட்கட்டமைப்புத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.98.79 கோடி மதிப்பீட்டிலான 3,113 திட்டப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 2,368 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 745 பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில், மேச்சேரி ஊராட்சி ஒன்றியம், ஓலப்பட்டி ஊராட்சி, வாழதாசம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.17.88 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வகக் கட்டடம் மற்றும் ரூ.34.60 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, ஓலப்பட்டி ஊராட்சி, வாழதாசம்பட்டியில் ரூ.13.81 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக குளம் அமைக்கும் பணி கள் நடைபெற்று வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
இதேபோன்று, எம்.காளிப்பட்டி ஊராட்சியில் ரூ.29.70 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கும் பணிகளும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஓலப்பட்டி ஊராட்சியில் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதையும் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், எம்.காளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், குட்டப்பட்டி ஊராட்சியில் கிராமப்புற வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, குட்டப்பட் டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.5.75 லட்சம் மதிப்பீட்டில் புங்கன், வில்வம் உள்ளிட்ட மரக்கன்றுகள் தயார் செய்யப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தரமாகவும், உரிய கால அளவி லும் முடித்து பொதுமக்கள் பயன்பாட் டிற்குக் கொண்டுவர தொடர்புடைய அலுவலர்களுக்கு இந்த ஆய்வின் போது அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.