fbpx
Homeபிற செய்திகள்கொல்லிமலை - தம்மம்பட்டி புதிய வழித்தடத்தில் பஸ் வசதி: நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் துவக்கி வைத்தார்

கொல்லிமலை – தம்மம்பட்டி புதிய வழித்தடத்தில் பஸ் வசதி: நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் துவக்கி வைத்தார்

கொல்லிமலையில் இருந்து தம்மம்பட்டிக்கு புதிய வழித்தடத்தில் பஸ் வசதியை நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள செம்மேட்டில் இருந்து, சேலம் மாவட்டம் தம்மம்பட்டி வரை செல்லும் வகையில், சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய வழித்தடத்தில் பஸ் வசதி செய்ய்பட்டுள்ளது. இதையொட்டி புதிய பஸ் வசதி துவக்க விழா, கொல்லிமலையில் நடைபெற்றது.

சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி எம்எல்ஏ நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மக்களவை உறுப்பினர் கொமதேக எம்.பி. மாதேஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, புதிய வழித்தடத்தில் பஸ் வசதியை துவக்கி வைத்தார்.

அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், கொம தேக தெற்கு மாவட்ட தலைமை நிலைய செயலாளர் செல்வராஜ், மாவட்ட இணை செயலாளர் தமிழரசு, கொல்லிமலை ஒன்றிய பொருளாளர் ராமசாமி, திமுக ஒன்றிய செயலாளர் செந்தில்முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் காளியப்பன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img