விஐடியின் நான்கு நாள் வருடாந்திர சர்வதேச விளையாட்டு, கலாச்சார விழா “ரிவியரா 2025” வேலூர் வளாகத்தில் தொடங்கியது.
விஐடி முதல் கரிகிரி மருத்துவமனை சந்திப்பு வரையிலான 9.9 கி.மீ தூரத்தில் மாரத்தான் ஓட்டத்துடன் விழா தொடங்கியது. இந்த ஆண்டு மாரத்தான் போட்டியின் கருப்பொருள் “உடல்நலத்திற்காக ஓடுதல்” என்பதாகும்.
மாரத்தான் போட்டியில் 1500 ஆண்களும் 1200 பெண்களும் கலந்து கொண்டனர். விஐடி பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் சங்கர் விஸ்வநாதன் ரிவியரா 2025-ஐ திறந்து வைத்து, மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவின் தலைமை விருந்தினராக இந்திய பெண்கள் கூடைப்பந்து முன்னாள் கேப்டன் பத்மஸ்ரீ. அனிதா பால்துரை கலந்து கொள்கிறார்.
இதில் தமிழி, கலா, கோ கார்டிங் போன்ற நிகழ்வுகள் வரிசையாக நடைபெறுகிறது. மேலும் மாலையில் பிரபல இந்திய பின்னணிப் பாடகி, ஸ்ரேயா கோசல், டி.ஜே. பரோமா ஆகியோரின் நிகழ்ச்சி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
பல கிளப் நிகழ்வுகள், மேடை நிகழ்ச்சிகள், உணவு ஸ்டால்கள் மற்றம் கண்காட்சிகளுடன், ரிவியரா 25 இளம் திறமைகள் மற்றும் ஆற்றலின் உருகும் பாத்திரமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.