fbpx
Homeபிற செய்திகள்சென்னை அண்ணா சாலையில் புல்மேன் ஹோட்டல்ஸ் -ரிசார்ட்ஸ் துவக்கம்

சென்னை அண்ணா சாலையில் புல்மேன் ஹோட்டல்ஸ் -ரிசார்ட்ஸ் துவக்கம்

பிரபல புல்மேன் ஹோட்டல்ஸ்-ரிசார்ட்ஸ் சென்னை அண்ணா சாலையில் திறப்பதை அறிவிக்கிறது. இது உலகளாவிய தொலைநோக்கு பார்வையாளர்களுக்கும் நகரவாசிகளுக்கும் ஒரு சிறந்த தளமாக அமைகிறது.

5,000 சதுர மீட்டர் பரப்பளவில் 232 அறை களைக் கொண்டுள்ள புல் மேன் நவீன வசதிகள் மற்றும் அதிநவீன தொழில் நுட்பத்தை ஒருங்கிணைக்கிறது.

ஹோட்டலின் பார், மதுபானத் தேர்வுகள் மற்றும் சிக்னேச்சர் காக்டெய்ல்களுடன் நல்ல அனுபவத்தை மறு வரையறை செய்கிறது. ஒரு உயர்ந்த உணவு அனுபவத்திற்காக, ஹோட்டலின் ரூஃப்-டாப் உணவகமான அப் நார்த் சமகால நேர்த்தியுடன் பாரம்பரிய வட இந்திய உணவு வகைகளை வழங்குகிறது.

ஸ்பா மற்றும் அதிநவீன உடற்பயிற்சி மையம் முதல், வெளிப்புற நீச்சல்குளம் வரை, ஹோட்டல் ஆரோக்கியத்திற்கான ஒரு முழுமையான அணுகு முறையை வளர்க்கிறது.

கார்த் சிம்மன்ஸ் தலைமை இயக்க அதிகாரி அக்கோர் ஆசியா கூறு கையில், “புல்மேன் சென்னை அண்ணா சாலை அறிமுகம் உயர் தர விருந்தோம்பல் அனு பவங்களுக்கு முன்னோடியான உள்ளது” என்றார்.

புதிய ஹோட்டலின் உரிமையாளரும் டெவலப் பருமான CEEBROS குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சுப்பா ரெட்டி கூறுகையில், “புத்தாக்கம் மற்றும் விருந்தோம்பலில் சிறந்து விளங்குவதற்கான எங்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், சீப்ரோஸ் குழுமத்தின் அடையாளமாக புல்மேன் சென்னை அண்ணாசாலை நிற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்“ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img