fbpx
Homeபிற செய்திகள்சர்தார் வல்லபாய் படேல் கல்லூரிக்கு எத்தியோப்பிய பிரதிநிதிகள் வருகை

சர்தார் வல்லபாய் படேல் கல்லூரிக்கு எத்தியோப்பிய பிரதிநிதிகள் வருகை

ஜவுளித்துறையில் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக நிபுணத்துவத்தை மேம்படுத்துவதை நோக் கமாகக் கொண்ட வெளிநாட்டு திறன் மேம் பாட்டுத்திட்டத்தின் ஒரு பகுதியாக எத்தியோப் பியாவைச் சேர்ந்த ஐந்து பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் சர்தார் வல்லபாய் படேல் சர்வ தேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரிக்கு வருகை தந்தனர்.

இந்த வருகை டெக்ஸ் காம்ஸ் வேர்ல்டுவைட் டெக்ஸ்டைல் சொலு ஷன்ஸ் என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐந்து நாள் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்நிகழ்வில் கல்லூரி யின் இயக்குனர் அல்லி ராணி, எத்தியோப்பியா அரசாங்கத்தின் உற்பத்தித் தொழில் மேம்பாட்டுநிறு வனத்தின் துணைஇயக்கு நர் ஜெனரல் சிலேஷி தலைமையிலான பிரதி நிதிகளை வரவேற்றார்.

இந்த குழு கல்லூரியின் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவு மற்றும் ஜவுளி வேதியியல் செயலாக்க ஆய்வகத்தைப் பார்வை யிட்டது. மேலும் நிலைத்தன்மை குறித்த ஆராய்ச்சி முன்னேற்றம் மற்றும் இந்திய ஜவுளி மற்றும் ஆடைத் துறைக்கு உதவுவதில் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த நுண்ணறிவுகளைப் பெற்ற னர். நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டிற்காக டாக்டர் பி.அல்லி ராணி மற்றும் குழுவினரை சிலேஷி வாழ்த்தினார். விவசாயி களை ஆதரிப்பதற்காக அரசாங்க மானியங்கள் கிடைப்பது குறித்த வழி காட்டுதல் உட்பட பருத்தி சாகுபடி நடைமுறைகளை மேம்படுத்துவது குறித்த மதிப்புமிக்க அறிவு ரைகளைப் பிரதிநிதிகள் பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img