fbpx
Homeபிற செய்திகள்கிள்ளிகுளம் விதை சுத்திகரிப்பு நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு

கிள்ளிகுளம் விதை சுத்திகரிப்பு நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கிள்ளி குளம் விதை சுத்திகரிப்பு நிலையத்தினை மாவட்ட ஆட் சித்தலைவர் இளம்பகவத் செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டார்.
இந்த செய்தியாளர் பயணத்தின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:

கிள்ளிகுளம் விதை சுத்திக ரிப்பு நிலையத்தில் உளுந்து, பாசிபயறு மற்றும் நெல் விதைகள் ஒரு நாளைக்கு சரா சரியாக 5 டன் விதைகள் சுத் திகரிப்பு செய்யப்படுகிறது. இங்கு சுத்திகரிப்பு செய்யப்படும் விதைகள் கருங்குளம், திருவை குண்டம் திருச்செந்தூர், சாத்தான் குளம், ஆழ்வார்திருநகரி, புதுக் கோட்டை, ஓட்டப்பிடாரம் மற்றும் கயத்தாறு போன்ற வட்டாரங்களை சேர்ந்த விதை கள் ஆகும். சான்றியளிப்பு துறையில் பதிவுசெய்து விதைப்பண்ணை அமைத்து அத்துறையினால் ஆய்வுசெய்த விவசாயிகளிடமிருந்து பெறப் பட்ட வயல்மட்ட விதைகள் இவ்விதைகளாகும்.

விதைகளை இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருப்பு வைத்து சுத்தம் செய்து விதை சான்றளிப்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆய்வகத்திற்கு பகுப்பாய்விற்க்கு அனுப்பி அந்த பகுப்பாய்வில் தேர்ச்சி பெற்ற விதைகளை அத்துறையால் வழங்கப்படும் சான்றட்டை வைத்து அந்தந்த வட்டாரத்திற்குரிய விதைகளை அந்த வட்டாரத்திற்குரிய வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு சரியான நேரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

அந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனாரால் திட்டம் வாரியாக இலக்கு பிரித்து வழங்கப்பட்டு வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களால் உண்மையான விவசாயியை கண்டறிந்து பரிந்துரை செய்து வேளாண்மை விரிவாக்கம் மையம் மூலமாக பட்டியலிடப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிகழ்வுகள் அனைத்து வட்டாரங்களிலும் சரியாக நடைமுறைப்படுத்தபடுகிறதா என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர்களால் கண் காணிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img