திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சத்துணவு திட்டம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக சிறுதானிய திருவிழா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து, கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
சிறு தானிய உணவின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சத்துணவு திட்டம், சமூக நலத்துறை இணைந்து சிறு தானிய திருவிழா நடைபெற்றது.
இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், அங் கன்வாடி பணியாளர்கள் இணைந்து இவ்விழாவில் திணை, கேழ்வரகு, கம்பு, சாமை, கொள்ளு, எள், நிலக்கடலை உள்ளிட்ட பல வகையான சிறு தானியங்களை பயன்படுத்தி பல் வேறு வகையான உணவு பொருட்கள் தயார் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. இக்கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு சிறு தானிய உணவுகளை உட்கொண்டார்கள்.
பின்னர் திருவிழா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி யானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி வேங்கிக்கால் ஊராட்சி மன்ற அலுவ லகம் வரை சென்று நிறைவடைந்தது. இதில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.