fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல் அச்சக உரிமையாளர்கள் சங்கத்தில் ‘பிரிண்டர்ஸ் டே’ கொண்டாட்டம்

நாமக்கல் அச்சக உரிமையாளர்கள் சங்கத்தில் ‘பிரிண்டர்ஸ் டே’ கொண்டாட்டம்

1440 ஆம் ஆண்டு ஜோ ஹன்னஸ் குட்டன்பெர்க் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்ததை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 24 ஆம் தேதி அச்சுப்பொறியாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்தப் புரட்சிகரமான கண்டுபிடிப்பு, புத்தகங்கள் மற்றும் அச்சிடப்பட்ட பொருட்களை உலகெங் கிலும் உள்ள மக்களுக்கு எளிதாகக் கிடைக்கச் செய்வதன் மூலம் அறிவு மற்றும் கருத்துக்களைப் பரப்புவதில் புரட்சியை ஏற்படுத்தியது. இதனை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 24ம் தேதி பிரிண்டர்ஸ் டே கொண் டாடப்படுகிறது.

நாமக்கல் பழைய பஸ் நிலையம் எதிரில் உள்ள நாமக்கல் மாஸ்டர் பிரிண்டர்ஸ் அசோ சியேஷன் அலுவலகத்தில் தலைவர் கே.செல்வகுமார் தலைமையில், செயலாளர் பி.சஞ்சீவி, பொருளாளர் சி.செந்தில் முருகன் முன்னிலையில் அச்சு இயந்திரத்தை கண்டுப் பிடித்த ஜோ ஹன்னஸ் குட்டன்பெர்க் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து சங்க உறுப்பினர்கள் அனை வரும் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இதில் திரளான அச்சக உரிமையாளர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img