fbpx
Homeபிற செய்திகள்கலசபாக்கம் ஒன்றிய வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த திருவண்ணாமலை ஆட்சியர் செய்தியாளர்களுடன் பயணம்

கலசபாக்கம் ஒன்றிய வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த திருவண்ணாமலை ஆட்சியர் செய்தியாளர்களுடன் பயணம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இன்றைய தினம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதமங் கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சியில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு கோப்புகள் மற்றும் பதி வேடுகளை செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து நபார்டு 2024-25 திட்டத்தின் கீழ் ரூ. 29 இலட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டப்பட்டு வருவதை செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க துறைசார்ந்த அலு வலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
இந்த ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கிருஷ்ணன், செயற்பொறியாளர் இளங்கோ, கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் செய்தியாளர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img