fbpx
Homeபிற செய்திகள்சேலத்தில் விகேசியின் 15வது கிளை துவக்கம்: மலிவு விலையில் நாகரீகமான காலணிகள் விற்பனை

சேலத்தில் விகேசியின் 15வது கிளை துவக்கம்: மலிவு விலையில் நாகரீகமான காலணிகள் விற்பனை

இந்தியா விகேசி நிறுவனம் சேலத்தில் முகமது ஃபாரூக் மற்றும் முகமது ரஃபி ஆகியோருக்குச்சொந்தமான அதன் 15வது புதிய கிளையை துவங்கியுள்ளது. இதனை விகேசியின் நிர்வாக இயக்குனர் விகேசி ரசாக் துவக்கி வைத்தார். இந்த மை விகேசி கிளையில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மலிவு விலையில் உயர் நாகரீகமான காலணிகள் கிடைக்கும்.

டெபோங்கோ பிராண் டின் கீழ், ‘கோ பிளானட்-டி’ என்ற துணை பிராண்ட் உலகின் முதல் 100% நிலையான மற்றும் வட்ட வடிவ காலணி பிராண்டாக உள்ளது.

இது இந்தியாவில் முதல் முறையாக, பயன் படுத்தப்பட்ட காலணி மறுவிற்பனை மதிப்பைக் கொண்டிருக்கும். இதன் முதல் முன்பதிவுகளுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் முகவரி மற்றும் கால் அளவுகளை இந்த கடைகளில் வழங்கினால் போதும். இது குறித்து விகேசி இந்தியாவின் இயக்குனர் வி.ரஃபீக் கூறுகையில், “விகேசி இந்தியா, சேலத்தில் தனது 15வது மை விகேசி கிளையைத் தொடங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img