fbpx
Homeபிற செய்திகள்தேசிய அளவில் பதக்கங்கள் பெற்ற ஆய்வாளருக்கு சேலம் காவல் ஆணையாளர் பாராட்டு

தேசிய அளவில் பதக்கங்கள் பெற்ற ஆய்வாளருக்கு சேலம் காவல் ஆணையாளர் பாராட்டு

68வது அகில இந்திய காவல்துறை திறனாய்வு போட்டி ஜார்கண்ட் மாநி லத்தின் தலைநகரம் ராஞ்சியில் கடந்த 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற்றது.

தமிழ்நாடு சார்பாக சேலம் மாநகரம், கருப்பூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் நவாஸ் கலந்து கொண்டு குற்றவியல் சட்டங்கள் தேர்வில் அகில இந்திய அளவில் வெண்கல பதக்கமும், தடய
அறிவியல் திறனாய்வு தேர்வில் அகில இந்திய அளவில் வெண்கல பதக்கம் என இரண்டு பதக்கங்களை பெற்று சேலம் மாநகர காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்நிலையில் காவல் ஆய்வாளர் நவாஸை சேலம் மாநகர காவல் ஆணையாளர் பிரவீண் குமார் அபினபு நேரில் அழைத்து பாராட்டி கௌரவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img