fbpx
Homeபிற செய்திகள்ராணிப்பேட்டையில் 1.50 லட்சம் மரங்கள் உற்பத்தி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ராணிப்பேட்டையில் 1.50 லட்சம் மரங்கள் உற்பத்தி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம், வேலம் ஊராட்சியில் வனத் துறையின் நாற்றங்கால் பண்ணையில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு வகை மரங்கள் மற்றும் பழச் செடிகள் உற்பத்தி செய்திட நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார்கள். அங்கு விதைகள் போட ப்பட்டு செடிகள் வளர்க்க செய்யப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.


அதேபோன்று காட்ரம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சித்துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்க ப்பட்டு வரும் நாற்றங்கால் பண்ணையில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரம் மற்றும் பழச் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தர்கள். விதைகள் போட்டு செடிகள் வளர்க்கும் பொழுது அதற்கான நடைமுறைகள் குறித்தும் கேட்டறிந்து, செய்தியாளர்களுக்கு விவரி த்தார்கள்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் பசுமை தமிழ்நாடு என்ற திட்டத்தினை அறிவித்து பல்வேறு துறைகள் மூலம் மரங்கள் நட்டு பராமரிக்கும் பணிகளை செயல்படுத்தி வருகின்றார்கள்.

அதன் அடிப்படையில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 7 ஊராட்சி ஒன்றியங்களில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 2 இடங்களில் தலா 10 ஆயிரம் நாட்டு வகை மரங்கள் மற்றும் பழச்செடிகள் வளர்த்து அதனை அக்கிராம ஊராட்சி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மேலும் அரசு காலியிடங்களில் நட்டு பராமரித்திட செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.


மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செடிகள் வளர்க்கும் பணிகள் பண்ணையில் நடைபெற்று வருகிறது. இச்செடிகள் சுமார் 6 அடி உயரம் வரை வளரும் வரையில் பண்ணையில் வளர்க்கப்பட்டு கொடுக்கப்படுகிறது.
இப்பணிகளை மேற்கொள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் அதிக பட்சம் 120 நாட்களுக்கு பணி வேலைகள் வழங்கப்பட்டு பெண்கள் நாள்தோறும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணிகள், பராமரிக்கும் பணிகள், கண்காணிப்பு பணிகளை செய்து வருகின்றனர்.

மேலும் ரூ.1 லட்சம் வரையில் விதைகள் வாங்க நிதி கொடுக்கப்பட்ட பின்னர் பணியாட்கள் செடிகளை உற்பத்தி செய்கின்றனர். 8 மாத காலம் செடிகள் வளர்வதற்கு தேவைப்படுகிறது. அது வரையில் 100 நாள் வேலை பணியாட்களுக்கு பணி வழங்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

இந்த நாற்றங்கால் பண்ணை களில் வேங்கை, மகாகனி, தேக்கு, மகிழம், செம்மரம், இலுப்பை, பாதாம், நீர்மத்தி, புங்கன், நாவல், கொய்யா, எலுமிச்சை, அசோகன், செண்பகம், கொடுக்காப்புளி, நெல்லிக் காய், சீத்தா, புளியன், மாதுளை போன்ற நாட்டு வகை மரம் மற்றும் பழச் செடிகள் வளர்க்கப்படுகின்றது.

இந்த நாட்டு வகை மரச் செடிகளையும், பழச் செடிகளையும் விவசாயிகள் பொதுமக்கள் தங்கள் காலியான இடங்களில் நட்டு வளர்க்கலாம். இவைகள் இலவசமாகவே பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவைகள் ஆண்டுதோறும் ஒவ்வொரு நிதி ஆண்டிற்கும் செடி களை உற்பத்தி செய்து கிராம பகுதிகளில் வழங்கப்படுகிறது.

இவைகள் மட்டும் இல்லாமல் வனத்துறையின் மூலமும் இதேபோன்று நாற்றங்கால் பண்¬ ணயின் மூலம் செடிகள் வளர்க்கப்பட்டு வழங்கப்ப டுகிறது. இவைகளை பொதுமக்கள் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை பா.ஜெயசுதா, வனசரகர் சரவணன் பாபு, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் செந்தில் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், செந்தாமரை, உதவி செயற்பொறியாளர், ஜெரால்டு, ஊராட்சி மன்ற தலைவர்கள் சந்தியா, உமா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img