டால்மியா சிமெண்ட் (பாரத்) லிமிடெட்டின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு பிரிவான டால்மியா பாரத் பவுண்டேசன் தமிழ்நாட்டின் அரியலூரில் கிராமப்புற மக்கள் மற்றும் மாணவர்கள் பயன் பெரும் வகையில் மூன்று முக்கிய சமூக உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளது.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், பளிங்காநத்தம் ஊராட்சியில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற கூடுதல் கட்டிடம், அதே கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட மாணவிகளுக்கான கழிப்பறை மற்றும் மிதிவண்டி நிறுத்து மிடம் ஆகியவை இதில் அடங்கும்.
இத்தொடக்க விழாவில் தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். மேலும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்கள், மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பளிங்காநத்தம் ஊராட்சியில் புதி தாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம், உள்ளாட்சி நிர்வாகத்திற்கான முக்கிய மையமாக செயல்படும். சிறந்த ஆளுகை மற்றும் பொதுச் சேவை வழங்கலுக்கு இது உதவும்.இந்நிகழ்ச்சியில் டால்மியா சிமெண்ட் லிமிடெடின் செயல் இயக்குநர் விநாயக மூர்த்தி கூறுகையில், “டால்மியா பாரத், நிலையான சமூக வளர்ச்சிக்கு வலுவான சமூக உள்கட்டமைப்பு அடிப்படை என்று நாங்கள் நம்புகிறோம். இதனால் கிராமப்புற மக்களுக்கு அடிப்படை உள்கட்டமைப்பு தேவைகளை கண்ட றிந்து தேவையான வளர்ச்சி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்,” என்றார்.