தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பாகலஅள்ளி ஊராட்சி, குரும்பட்டி முதல் கடுதுகாரம்பட்டி சாலை வரையுள்ள பழுத டைந்த தார் சாலையை மேம்படு த்தும் பணிக்கு நபார்டு திட்டத்தின் கீழ் 110.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், பாமக மாவட்ட துணை செயலாளர் த.காமராஜ், மாவட்ட பொறுப்பாளர் இ.மா.பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் மா.முரு கன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், ராமமூர்த்தி, நிர்வாகிகள் மாதவராஜ், சுப்ரமணி, வேலுசாமி, ராஜேந்திரன், சுதாகர், முருகன், விஜி, நாகப்பன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர்பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.