கடலூர் அருகே சுனாமி குடியிருப்புகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார் கடலூர் அடுத்த குடிகாடு ஊராட்சி ராசபேட்டை சுனாமி குடியிருப்பு பகுதிகளை மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது சேதமடைந்துள்ள குடி யிருப்புகளை பழுதுபார்த்து பொது மக்கள் பாதுகாப்பான நிலையில் தங்கள் குடும்பங்களுடன் தங்கும் வகையில் விரைந்து சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு முடிக்கவும், குடி நீர் வசதி, சாலைவசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கலெக்டர் கூறியதாவது:- கடலூர் மாவட்டத்தில் 26.12.2004 அன்று ஏற்பட்ட சுனாமி பேரலை தாக்குதல் காரணமாக ஏராளமான குடியிருப்புகள் இடிந்து சேதமடைந்ததை தொடர்ந்து, அரசு சார்பிலும் தன்னார்வ அமைப்புகளின் மூலமாகவும் 2006-ம் ஆண்டு 300 சதுர அடி பரப்பளவில் பொதுமக்களின் நலன் கருதி ராசாப்பாளையம் மற்றும் பச்சையாங்குப்பம் பகுதியில் 223 குடியிருப்புகள் கட்டப்பட்டு பொதுமக்கள் 5 தற்போது வசித்து வருகின்றனர்.
இந்த குடியிருப்புகளின் பாதுகாப்பு தன்மை மற்றும் நிலை குறித்து கணக் கெடுக்கப்பட்டது. அதில் 132 குடியிருப்புகள் பாதுகாப்பாக நல்ல நிலை யிலும், 17 குடியிருப்புகள் சேதமடைந்த நிலையிலும், 74 குடியிருப்புகள் பகுதியளவு சேதமடைந்த நிலையிலும் உள்ளது.
பெருமளவில் சேதமடைந்த வீடுகளில் கூரைப் பகுதி செப்பனிடுதல், தரைப் பகுதி, சுவர்களில் ஏற்பட் டுள்ள விரிசல்களை சீரமைத்தல், மின்இணைப்பு பழுதுபார்ப்பு, வர் ணம் பூசுதல், தண்ணீர்குழாய் ஏற்படுத்துதல், தரைத்தளத்தில் டைல்ஸ் ஏற்படுத்துதல் போன்ற பணிகள் ரூ.1லு லட்சம் மதிப்பீட்டிலும், பாதியளவு சேதமடைந்த வீடுகளில் சுவர்களில் ஏற்பட்ட விரிசல்களை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், தரைப்பகுதி சீர மைத்தல், சிறு சிறு பழுதுபார்க்கும் பணிகள் ரூ.55 ஆயிரம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது ஊரகவளர்ச்சித்துறைசெயற் பொறியாளர் வரதராஜன், உதவி திட்ட அலுவலர் முபாரக் அலி பெய்க், வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமணி, உதவி பொறியாளர் கல்யாணசுந்தரம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.