கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்களுக்கான பிரத்யேக கிரிக்கெட் போட்டியான அலுமினி பிரீமியர் லீக் 2025, கேபிஆர் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியை கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்தியது.
இதில் கல்லூரியின் முதல்வர் முனைவர் சரவணன் போட்டியைத் தொடங்கி வைத்து பேசுகையில், “இந்தப் போட்டி முன்னாள் மாணவர்கள் மீண்டும் இணைவதற்கும் நமது கேபிஆர் கல்லூரியுடனான பிணைப்பை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.
11 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் 100 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
தொடர்ச்சியான போட்டிகளுக்குப் பிறகு, கிரேஸி 11 அணி சாம்பியன் பட்டத்தை வென்றது, அதே நேரத்தில்
பிளாக் ஸ்குவாட் அணி 2ம் இடத்தைப் பிடித்தது. சந்தீப் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் தொடர் முழுவதும் நிலையான பங்களிப்பை வெளிக்காட்டிய ரஞ்சித்துக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது” என்றார்.