fbpx
Homeபிற செய்திகள்தமிழகத்திலேயே முதல் முறையாக ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் கணுக்கால் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை

தமிழகத்திலேயே முதல் முறையாக ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் கணுக்கால் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை

தமிழகத்திலேயே முதல் முறையாக ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் கணுக் கால் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ஸ்ரீசக்தி அம்மாவின் அருளாசியோடு இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீநாரா யணி மருத்துவமனையில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை பிரிவில் மருத் துவ வல்லுநர்கள் சாதனை புரிந்ததை மருத்துவ இயக்குனர் டாக்டர் என்.பாலாஜி பாராட்டி னார். அவர் கூறியதாவது:- ‘திலிப்ராய் வயது 20. இவர் 3 மாதங்களுக்கு முன்பு உயரத்திலிருந்து கீழே விழுந்ததைத் தொடர்ந்து கடுமையான கால்வலி மற்றும் நடக்கவே சிரமமாக இருப்பதாக எங்களது எலும்பு மருத்துவரிடம் தெரிவித்தார்.

நோயாளியின் நோயை கண்டறிய எக்ஸ்ரே, சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக் கப்பட்டது. அதன் மூலம் அவரது கணுக்கால் எலும்பு மாறி கூடியதை கண்டறிந்தோம். இதன் தொடர்ச்சியாக ரத்தநாள நசிவு இருந்ததை கண்ட றிந்தோம்.
பொதுவாக இந்த மாதிரியான கணுக்கால் முறிவு, Plate & Screw மூலம் சரி செய்யப்படும். ஆனால் இதன் வெற்றி சத வீதம் குறைவாக இருந்தது. ஆகையால் நோயாளியின் வயதை மனதில் கொண்டு இன்னும் நெடுங்காலம் அவருக்கு நல்ல நடைப்பயிற்சி தேவை என்பதால், இந்த முழு கணுக்கால் அறுவை சிகிச்சை எலும்பியல் துறையை சார்ந்த டாக்டர் ரெஜித் மேத்யூஸ் முதன்மை மருத்துவராகவும், டாக்டர் திருமலை மோகன் மற்றும் மயக்கவியல் சிறப்பு மருத்துவர் கிருஷ்ணன் ஒருங்கிணைந்து நோயாளியின் முந்தைய கணுக்காலுக்கு ஏற்றவாறு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கணுக்கால் எலும்பு பொருத்தப்பட்டது. மேலும் சிடி ஸ்கேன் படங்களின் உதவியுடன் செயற்கை கணுக்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முதன் முறையாக தமிழகத்தில் எங்களது மருத்துவமனையில் மேற்கொள்ளப் பட்டது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்

படிக்க வேண்டும்

spot_img