-கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் திட்டு பகுதியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி சிலை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா எம்ஜிஆர் திட்டு பகுதியில் நடைபெற்றது.
கிள்ளை நகர தி.மு.க. செயலாளரும், பேரூராட்சி மன்ற துணை தலைவருமான கிள்ளை ரவிந்திரன் பங்கேற்று முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவரது திருவுருவ சிலை அமைக்க அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.