கோவையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை வலியுறுத்தி 215 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். முன்னாள் ராணுவ வீரரான இவர், தற்போது தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் போதைப் பொருட் களுக்கு எதிர்ப்பு, வன விலங்குகளை காப்பாற்றுதல், பூமியை பாதுகாத்தல், அனைவருக்கும் கல்வி, பெண் குழந் தைகள் கல்வி மற்றும் வயது ஒரு நம்பர் மட்டுமே உள்ளிட்ட காரணிகளை வலியுறுத்தி இதுவரை 13,000 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண் டுள்ளார்.
நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த பய ணத்தை சரவணன் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், நடப்பாண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு சரவணன், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் பேரணி மேற்கொண்டார்.
நீலாம்பூரில் இருந்து திரூப்பூர், சூலூர், பல்லடம், மருதமலை உள்ளிட்ட இடங்களுக்கு சைக்கிளில் பேரணி சென்றார். 200 கி.மீ பயணம் என்று இலக்கு நிர்ணயித்த சரவணன், மொத்தம் 215.35 கி.மீ பயணித்துள்ளார்.
இது குறித்து சரவணன் கூறுகையில், “பெண்கள் எப்போதும் சமூகத்தின் முதுகெலும்பாக இருந்து வருகின்றனர். எனது இந்த பயணம் அவர்களின் அசைக்க முடியாத வலிமைக்கு சமர்ப்பணம். தடைகளை உடைத்து, வரம்புகள் என்பது நம் மனதில் மட்டுமே உள்ளன என்பதை நிரூபணம் செய்ய இந்த பயணத்தை மேற்கொண்டேன். பல்வேறு விழிப்புணர்வு சைக்கிள் பேரணிகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ளேன். இதனிடைய மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் குறித்த விழிப்புணர்வுக்காக இந்த சைக்கிள் பேரணி செய்தேன். தொடர்ந்து இது போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவேன்” என்றார்.