ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 21வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது.
இதில் 2022- 2023ம் கல்வியாண்டில் தேர்ச்சிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
இதில் இளங்கலை மற்றும் முதுகலை வணிகவியல்த்துறை, இளங்கலை மற்றும் முதுகலை மேலாண்மைத்துறை, ஆங்கிலத்துறை, கணிதத்துறை, கணினித்துறை. ஆடை வடிவமைப்புத்துறை, காட்சித் தொடர்பியல்த்துறை ஆகிய துறைகள் சார்ந்த சுமார் 1,365 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பட்டம் பெற்றார்கள்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பை ஜி.டி.எஸ். இணை இயக்குநர் பிரகதீஷன், அனாலெக்ட் இந்தியா-ஆம்னிகாம் மீடியா குழும நிறுவன இயக்குனர் ஹரி வி.பி.ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் அவர்கள் பேசுகையில், “மாணவர்கள் திறன்களை வளர்த்து கொண்டு உயர்நிலையில் அடைதல் அவசியம்” என்றனர்.
ரத்தினம் கல்விக்குழுமத்தின் தலைவர் மதன் ஆ.செந்தில் மற்றும் இயக்குநர் ஷீமா செந்தில் தலைமையேற்க முதன்மை நிர்வாகி மாணிக்கம்,
கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
துணை முதல்வர் சுரேஷ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தினகரன், ஆய்வுத்துறை புல முதன்மையர் சபரிஷ் மற்றும் வணிகவியல்த்துறை புல முதன்மையர் ஹேமலதா மற்றும் அனைத்துறை சார்ந்த துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.