fbpx
Homeபிற செய்திகள்54வது தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார விழா

54வது தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார விழா

ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டார் உர தொழிற்சாலையில் 54வது தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி வஉசி துறைமுகத்தின் ஹார்பர் மாஸ்டர் கேப்டன் கிங்ஸ்டன் நீல் துரை தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார விழாவினை கொடியேற்றி துவக்கி வைத்தார்.

மேலும், அவரது தலைமையில் ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டார் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தனியார் ஹாலில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு பொருட்காட்சியையும் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து நிறைவு விழாவில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார்.

இவ்விழாவில் ஸ்பிக் நிறுவனத்தின் முழுநேர இயக்குனர் பாலு, க்ரீன்ஸ்டார் நிறுவனத்தின் முழுநேர இயக்குனர் செந்தில் நாயகம், ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார விழாவினையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img