fbpx
Homeபிற செய்திகள்அறிமுக சலுகை விலையில் ஐக்யூஓஓவின் நியோ 10ஆர் ஸ்மார்ட் போன் அறிமுகம்

அறிமுக சலுகை விலையில் ஐக்யூஓஓவின் நியோ 10ஆர் ஸ்மார்ட் போன் அறிமுகம்

உயர் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் பிராண்டான ஐக்யூஓஓ, அதன் புதிய ஐக்யூஓஓ நியோ 10ஆர் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.

அதிநவீன தொழில்நுட்பத்தில், கல்லூரி மாணவர்கள், தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் கேமிங் ஆர்வலர்களுக்கு ஏற்ற வகையில் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மிகவும் மென்மையான நிலையான 90 எப்பிஎஸ், கேமிங்கிற்கான 144Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் இந்த விலைப் பிரிவின் மிக மெல்லிய 6400எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட அதிநவீன அம்சங்களைக் கொண்டுள்ளது.

அறிமுக சலுகையாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கார்டுடன் ரூ.26,999க்கு பதிலாக ரூ.24,999-க்கும், 8ஜிபி மற்றும் 256ஜிபி உடன் ரூ.28,999க்கு பதிலாக ரூ.26,999-க்கும், 12ஜிபி மற்றும் 256ஜிபி உடன் ரூ.39,999க்கு பதிலாக ரூ.28,999க்கும் ரேஜிங் ப்ளூ மற்றும் மூன்நைட் டைட்டானியம் ஆகிய இரு வண்ணங்களில் கிடைக்கிறது.

இதன் விற்பனை வரும் 19ம் தேதி அன்று பகல் 12 மணிக்கு துவங்க உள்ளது. இந்நிலையில் அமேசான் மற்றும் ஐக்யூஓஓ ஆன்லைன் ஸ்டோரில் இதற்கான முன் பதிவு துவங்கி உள்ளது.

புதிய அறிமுகம் குறித்து ஐக்யூஓஓ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிபுன் மரியா கூறுகையில், “புதுமை மற்றும் பயனர்களின் தேவையை அறிந்து எங்களின் ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் தயாரிக்கப்படுகிறது” என்றார்.

அமேசான் நுகர்வோர் மின்னணுவியல் இயக்குனர் ஜெபா கான் கூறுகையில், “இந்த சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனை நாடு முழுவதும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img