fbpx
Homeபிற செய்திகள்கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சாதனை

கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சாதனை

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் ஆடை வடிவமைப்பு மற்றும் கவின் புனைவியல் துறை மாணவ -மாணவிகள் நடப்பு கல்வியாண்டில் பல்வேறு கல்லூரிகளில் நடைபெற்ற மாநில அள விலான போட்டிகளில் கலந்து கொண்டனர்.
கேஎஸ்ஆர் மகளிர், காமதேனு, ஸ்ரீ விவேகானந்தா, பிஎஸ்ஜி, பார்க்ஸ் கலை அறிவியல் கல்லூரிகளில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்று, பரிசு தொகையாக ரூ.94 ஆயிரத்தையும் பெற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவி களை கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல், முதல்வர் வாசுதேவன், ஆடை வடிவமைப்பு துறை தலைவர் மஞ்சுளா பாராட்டி கவுரவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img