சேலம் வாசன் கண் மருத்துவமனை சார்பில் 50 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு இலவச கண் பரி சோதனை தொடக்க விழா நடைபெற்றது. இதில் சேலம் பாராளுமன்ற தொகுதி எம்.பி.டி.எம். செல்வகணபதி தலைமை தாங்கி பரிசோதனையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசிய தாவது: கண் பிரச்சனைகள் முதியவர்களுக்கு அதிக அளவில் வருகிறது. வயது மூப்பு மற்றும் உடல் நல பிரச்சனை காரணமாக இந்த கண் பாதிப்பு ஏற்படுகிறது. அதற்கு உரிய சிகிச்சை பெற வேண்டும். சரியாக பராமரிக்கவில்லை என்றால் பெரும் பாதிப்பு ஏற்படும்.
இன்றைய உணவு கள் தரமாக இல்லாததால் உடல் பிரச்சினைகள் அதிக அளவில் வருகிறது.
50 வயதிற்கு மேற் பட்டவர்களுக்கு வழங்கப் படும் இந்த இலவச பரி சோதனை விழிப்புணர்வு மூலம் ஏராளமானோர் பயன்பெறுவார்கள் என்பதால் அதற்காக சேலம் வாசன் கண் மருத்துவமனையை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் வாசன் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் செல்வ குமாரி மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை நிபுணர் சந்தனா ஆகியோர் கலந்து கொண்டு கண் புரை குறித்த விழிப்புணர்வு வழங்கினர். மேலும் இந்த விழாவில் சேலம் மாவட்ட அனைத்து ஓய்வூதியர்கள் சங்க தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சலுகையை பொதுமக்கள் வரும் 31ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ள லாம் என ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சேலம் வாசன் கண் மருத்துவ மனை மண்டல மேலாளர் செல்வம் செய்திருந்தார்.