fbpx
Homeபிற செய்திகள்நிலைப்புத்தன்மை, ஆற்றல் - எரிசக்தி மாற்றுகை குறித்த கலந்துரையாடல் கோவையில் சௌத் இந்தியன் வங்கி நடத்தியது

நிலைப்புத்தன்மை, ஆற்றல் – எரிசக்தி மாற்றுகை குறித்த கலந்துரையாடல் கோவையில் சௌத் இந்தியன் வங்கி நடத்தியது

சவுத் இந்தியன் பேங்க் என்பது, கேரளாவை அடித்தளமாகக் கொண்டு தேசிய அளவில் வங்கி செயல்பாடுகளை மேற்கொண்டு வரும் ஒரு தனியார்துறை வங்கி யாகும்.
இந்த வங்கி, இங்கிலாந்தைச் சேர்ந்த உலகளாவிய முதலீட்டு வங்கியான பாண்டோக்ராட்டருடன் இணைந்து, கோவை ரெசிடென்சி டவரில் நிலைத் தன்மை மற்றும் ஆற்றல் / எரிசக்தி மாற்றுகை குறித்த கலந்துரையாடல் நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தியது.

இந்நிகழ்வில், நிலைப்புத்தன்மையுள்ள எரிசக்தித் துறையில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய இத்தொழில் துறை சார்ந்த தலை வர்களும் மற்றும் நிபுணர்களும் ஒருங்கிணைந்து பங்கேற்றனர்.
இந்த கலந்துரையாடல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் சாத்தியக்கூறுகள், திறமை யான எரிசக்தி விநியோகம் மற்றும் தொழில்துறையை வடிவமைக்கும் முக்கிய உலகளாவிய போக்குகள் ஆகிய அம்சங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தியது. தென்னிந்திய சௌத் இந்தியன் வங்கியின் கார்ப் பரேட் வாடிக்கையாளர்கள் இந்த இன்டராக்டிவ் அமர்வில் பங்கேற்று, நிபுணர்கள் குழு உறுப்பினர்களுடன் கலந்துரை யாடி வளர்ந்து வரும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த கருத்துகளையும், கண்ணோட்டங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்த அமர்வின் நிபுணர்கள் குழுவில், இங்கிலாந்தைச் சேர்ந்த பாண்டோக்ராட்டரின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக பங்குதாரர் ஆண்ட்ரே ஷோர்டெல்; பாண்டோக்ராட்டர் நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ராஜாராம் வெங்கடராமன்; எவெர்ரென்யூ எனர்ஜி பிரைவேட் லிமிடெட்டின் குழும தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஆர். வெங்கடேஷ் மற்றும் சௌத் இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயலாக்க அதிகாரி பி.ஆர்.சேஷாத்ரி ஆகியோர் இடம்பெற்று கருத்துகளை எடுத் துரைத்தனர்.

வங்கியின் மூத்த பொது மேலாளர் மற்றும் கார்ப்பரேட் வணிகக் குழுவின் தலைவர் மினு மூஞ்சல்லி, விவாத அமர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களையும், பங்கேற் பாளர்களையும் வரவேற்று உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய சௌத் இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயலாக்க அதிகாரி பி.ஆர்.சேஷாத்ரி, சௌத் இந்தியன் வங்கியில், நிலைப்புத்தன்மையுள்ள நிதி நிர்வாகம் மீது வங்கியின் கூர்நோக்கத்தை வலியுறுத்திப் பேசுகையில், “நிலைப் புத்தன்மையுள்ள எதிர்காலத்தை வளர்த்து உருவாக்குவதில் நிதி நிறுவனங்களின் மிக முக்கியப்பங்கை நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம், அங்கீகரிக்கிறோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிலைப் புத்தன்மையால் உந்தப்படும் முன்னெடுப்பு திட்டங்களில் முத லீடுகளை நாங்கள் தீவிரமாக ஆதரித்து வருகிறோம். எனினும், இக்குறிக்கோளின் மீது எங்களது அர்ப்பணிப்பு வங்கிச் சேவைகள் என்பதற்கும் அப்பாற்பட்டதாகும். பொறுப்புள்ள நிதியுதவி சேவையை எளிதாக்குவதன் மூலம், பசுமையான மற்றும் அதிக மீள்திறன் கொண்ட பொருளா தாரத்திற்கு பங்களிப்பது எமது நோக்கமாகும்.” என்று கூறினார்.

ஆண்ட்ரே ஷோர்டெல், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஐரோப்பிய நிறுவனங்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்டார். “பாண்டோக்ராட்டர் நிறுவனத்தில் மூலதன திரட்டல், மூலோபாய வளர்ச்சி ஆலோசனை மற்றும் இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல்கள் மூலம் எரிசக்தி மாற்றத்தை முன்னெடுக்கும் ஐரோப்பாவில் உள்ள முன்னணி தொழில் முனைவோருக்கு நாங்கள் ஆதரவளித்து வருகிறோம். இத்தகைய அதிவேக வளர்ச்சியடைந்து வரும் நிறுவனங்கள், அவைகளின் விரிவாக்கத் திட்டங்களில் இந்தி யாவையும் உட்சேர்க்க அதிக ஆர்வம் காட்டுவதை நாங்கள் காண்கிறோம்.
மேலும், சௌத் இந்தியன் வங்கி மற்றும் அதன் வாடிக்கையாளர்களுடன் இணை ந்து இந்த முயற்சியில் ஒரு செயலூக்கியாக செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img