நாமக்கல் மாவட்டம், பெரியப்பட்டி மற்றும் வள்ளி புரத்தில் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் நரிக்குறவர் குடும்பங்களுக்கு வீடு கட்டும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா செய்தியாளர்களுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
2023-2024 ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நலத்துறை மானிய கோரிக்கையில் பொரு ளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 1000 பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் தற்போது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 500 நரிக்குறவர் குடும்பங்கள் என மொத்தம் 1500 குடும்பங்களுக்கு ரூ.45 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டித்தரப்படும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் அறிவித்தார்.
அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் கொல்லிமலைப்பகுதியில் 30 வீடுகளும், தரைப்பகுதியில் 49 வீடுகளும் என மொத்தம் 79 வீடுகள் கட்டப்பட்டு வரு கின்றன. தரைப்பகுதியில் நரிக் குறவர் காலனியில் 28 வீடுகளும், பெரியப்பட்டியில் 17 வீடுகளும், வள்ளிப்புரத்தில் 11 வீடுகளும், மங்களபுரத்தில் 15 வீடுகள் என மொத்தம் 49 வீடுகள் கட்டப் பட்டு வருகின்றன.
தரைப்பகுதிக்கு மதிப்பீடு ரூ.5.07 லட்சத்திலும், மலைப் பகுதிக்கு மதிப்பீடு ரூ.5.72 லட்சத்திலும் வீடுகள் கட்டப் பட்டுவருகிறது. ஒவ்வொரு வீடும் 269 சதுர பரப்பளவில் கட்டித்தரப்படுகிறது. தார்சு கட்டடம் கட்டப்படும்போது ஒரு முகப்பு அறை, படுக்க அறை, சமையலறை மற்றும் குளியலறை கழிவறை வசதியு டன் மற்றும் சிட் அவுட்-வுடன் கட்டப்பட்டுவருகிறது. பையோ செப்டிக் டேங்க் வசதி செய்யப்படுகிறது. மின் வசதியு டன் மின் சாதனங்கள் பல்பு மற்றும் மின் விசிறி வசதிகள் அமைக்கப்படுகின்றன.
கட்டுமான பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை முடித்து பயன் பாட்டிற்கு வழங்கிட வேண்டு மென அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.
இந்த ஆய்வின்போது தாட்கோ செயற்பொறியாளர் திரு.நடராஜன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.