fbpx
Homeபிற செய்திகள்கோவையில் தேசிய பஞ்சாலை கழக அலுவலகம் முற்றுகை தொமுச போராட்டம்

கோவையில் தேசிய பஞ்சாலை கழக அலுவலகம் முற்றுகை தொமுச போராட்டம்

கோவை காட்டூர் பகுதியில் உள்ள தேசிய பஞ்சாலை கழக அலுவலகத்தை 5 மாதமாக சம்பளம் கொடுக்க வில்லை எனவும், அரியர் தொகையும் வழங்கவில்லை எனக் கூறியும், மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான ஆலைகள் 2020 முதல் இயக்கப்பட வில்லை எனவும் தொழிலாளர்களுக்கு பாதி சம்பளம் மட்டும் வழங்கி வந்த நிலையில் தற்போது அந்த ஊதியமும் வழங்கவில்லை எனக் கூறி தொழிலாளர்கள் குடும்பத்துடன் கையில் பூட்டுடன் தேசிய பஞ்சாலை கழக அலுவலக வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

எல்.பி.எப் தொழிற் சங்கத்தின் பொதுச் செய லாளர் பார்த்தசாரதி கூறும் போது, சவுத் ரீஜனில் கிட்டத்தட்ட 2000 தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கிட்டத் தட்ட ஐந்து மாதமாக அவர்களுக்கு வர வேண் டிய சம்பள பாக்கி 200 கோடி ரூபாயை விடுவிக்க வேண்டும். கிட்டத்தட்ட என்.டி.சி யின் சொத்து ஒரு லட்சம் கோடி இருக்கிறது.

இதை தர மறுப்பதால் தான் போராட்டம் நடத்தப்படுகிறது. வேலை பார்த்த சம்பளத்திற்காக உரிமைக்காக போராடிக் கொண்டு இருக்கிறோம். அவர்கள் ஒத்துக் கொண்டதன் படி, 15 தினங்களுக்குள் சம்பள பாக்கியத்தை வழங்க வில்லை என்றால், இந்த அலுவலகத்தில் அமர்ந்து வீடு திரும்பா போராட்டம் முன்னெடுக்கப்படும். அதுவும் குழந்தை குட்டி கள் குடும்பமாக வந்து அமருவதை தவிர வேறு வழியில்லை என்றார்.

படிக்க வேண்டும்

spot_img