கடலூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.10.75 லட்சத்தில் பயனாளிகளுக்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறை களை கேட்டறிந்து மனுக்கள் பெற்றார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தி ருந்தவர்கள், வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 840 மனுக்களை அளித்தனர்.
அப்போது பொது மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர், அதனை 5 சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து தாட்கோ மூலம் செயல்பட்டு வரும் தூய்மைப் பணிபுரி வோர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவுசெய்யப்பட்ட 11 தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டைகளையும், ஒரு தற்காலிக தூய்மை பணியாளரின் வாரிசுதாரருக்கு ரூ.1,500 மதிப்பில் பட்டப்படிப்பு பயில்வற்கான உதவித் தொகையை கலெக்டர் வழங்கினார்.
மேலும் முதல்-அமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினருக்கு பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.3 லட்சத்து 77 ஆயிரத்து 87 மானியத் தொகையுடன் கூடிய ரூ.10லட்சத்து 77 ஆயிரத்து 390 மதிப்பிலான உதவிகளும் என மொத்தம் 15 பயனாளிகளுக்கு ரூ.10.75 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், தமிழ்நாடு தூய்மை பணிபுரிவோர் நலவாரிய மாநில உறுப்பினர் கண்ணன், தனித்துணை ஆட்சியர் தங்கமணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.