திருவண்ணாமலை பால்பண்ணை மற்றும் பால்பவுடர் தொழிற் சாலையின் கையாளும் திறனை உயர்த்த, ரூ.10 கோடி செலவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வெண்ணெய் மற்றும் பால் பவுடர் பேக்கிங் செய்யும் நவீன எந்திரம் அமைக்கப் படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அம்மாபாளையம் பால் பண்ணை மற்றும் பால் பவுடர் தொழிற் சாலையில் நாளொன்றுக்கு 2.25 லட்சம் லிட்டர் உற்பத்தி நடைபெறுகிறது. இந்த தொழிற்சாலையில் அதிநவீன தொழில் நுட்பத்தில் ரூ.10 கோடி செலவில் வெண் ணெய் மற்றும் பால் பவுடர் பேக்கிங் செய்யும் நவீன எந்திரம் அமைக்கப்படுகிறது. இதன் மூல மாக வெண்ணெய் மற்றும் பால் பவுடரின் தரம் மற்றும் திறன் மேம்படுத்தப்படும்.
இது பற்றி திருவண்ணாமலை ஆவின் பொது மேலாளர் டாக்டர் எஸ்.தனபாலன் கூறுகையில், வெயில் காலங்களில் பால் உற்பத்தி நடைபெறுவதால் உபரி பால் வெண்ணை மற்றும் பால் பவுடரை பேக்கிங் செய்வதற்கு உபயோகப்படும்.
மேலும் தற்பொழுது பட்ஜெட்டில் அறிவித் திருப்பதால் மிக விரைவில் டெண்டர் அறிவிக்கப்பட்டு அதற்கான நடைமுறை கள் துவங்கப்படும் என்று தெரிவித்தார்.