கோவை நிர்மலா மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை (அரசு உதவி பெறும் பிரிவு) சார்பில் நேற்று (18ம் தேதி) அன்று பொலிவும் பரிசளிப்பும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.
நிர்மலா மகளிர் கல்லூரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரஸ், முதல்வர் முனைவர் அருட்சகோதரி மேரி பபியோலா ஆகியோர் முன்னிலையில் நடந்த நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.மகேஸ்வரி வரவேற்புரை வழங்கினார்.
தமிழ்மன்ற மாணவ நிர்வாகி தமிழரசி 2024-2025 ஆம் ஆண்டிற்கான செயல்பாடுகள் அடங்கிய ஆண்டறிக்கையினை வாசித்தார். சிறப்பு விருந்தினராக பட்டிமன்றப்பேச்சாளரும் திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகருமான கோவை தனபால் இணையத்தால் இணைவோம்
எனும் தலைப்பின் வழி மாணவிகள் அன்னப்பறவை போன்று இணையத்தில் நன்மை தீமைகளை பிரித்தறிந்து பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
சிறப்பு விருந்தினருக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட்சகோதரி மேரி பபியோலா நினைவு பரிசு வழங்கினார். தொடர்ந்து போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவின் நிறைவாக தமிழ் மன்ற மாணவ நிர்வாகி யாழினி நன்றியுரை வழங்கினார்.
தேசிய மீள்தர நிர்ணயக்குழுவினரால் ‘A++’ மதிப்பும் 4 ஆம் தகுதிச்சுற்றில் CGPA 3.78 புள்ளிகளும் பெற்றது நிர்மலா கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.