தர்மபுரி நகர தே.மு.தி.க. சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாள் விழா தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சுரேஷ் வரவேற்றார்.
விழாவில் கட்சியின் மாநில அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன் கலந்து கொண்டு பிரமாண்ட கேக் வெட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தொழிற்சங்க மாநில நிர்வாகி விஜய்வெங்கடேஷ், மாவட்ட அவைத் தலைவர் தங்கவேல், ஒன்றிய செயலாளர்கள் விக்னேஷ் குமார், சரவணன், முன்னாள் நகர செயலாளர் தேவ தேவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு நகரின் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.