இது வரை ரயிலிலும் ஏறவில்லை. விமானத்திலும் ஏறவில்லை
என கூறிய மாணவர்களின் கனவை பூர்த்தி செய்துள்ளார், தூத்துக்குடி பண்டாரம்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர். தமிழக அரசின் “எண்ணும் எழுத்தும்“ பாடத்திட்டப்படி முப்பரு வங்களாக மாணவர்கள் கல்வி கற்கின்றனர். தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் முப் பருவத்திலும் பாடசம் பந்தமாக பாடத்தில் உள்ள படி களப் பயணமாக அழைத்துச் சென்று வருகிறார்.
தற்போது தனது ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நாள் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தில் விலங்குகள் குறித்தும், அப்பாடத்தில் வண்டலூர் வனவிலங்குகள் சரணாலயம் பற்றியும், சமூக அறிவியல் பாடத்தில் போக் குவரத்து குறித்தும், அதில் இருப்புப்பாதை மற்றும் சென்னை மெட்ரோ இரயில் பற்றியும் பாடம் இருந்தது.
அது பற்றி நடத்திக்கொண்டிருக்கும் போது ஒரு மாணவன், “தினமும் எங்கள் தலைக்கு மேலே விமானம் பறக்கிறது. அருகில் தான் ரயில் செல்லும் சத்தம் கேட்கிறது. ஆனால் நாங்கள் ஒரு நாளும் விமானத்திலும், ரயிலிலும் பயணம் செய்யவில்லை” என ஏக்கமாக தெரிவித்துள்ளார்கள்.
தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் தனது மாணவர்கள் ஆசையை நிறைவேற்ற திட்டமிட்டார். ஆகவே ஐந்தாவது வகுப்பு படிக்கும் 4 மாணவி உள்பட 12 மாணவர்களை விமானத்தில் சென்னை அழைத்துச் சென்று வண்டலூர் மிருகாட்சி சாலையை காண திட்டமிட்டார். இதற்காக நாளும் குறிக்கப்பட்டது.
அதன்படி இன்று (22ம் தேதி) காலை 6 மணிக்கு கிளம்பும் விமானத்தில் முன்பதிவு செய்தார். தன் னிடம் 5 ஆம் வகுப்பு படிக்கும் பன்னிரண்டு மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் 6 பேர், மற்றும் இரண்டு பெற்றோர்களை அழைத்துக்கொண்டு அவர் தூத்துக்குடியில் இருந்து சென்னை கிளம்ப திட்டமிட்டார்.
சென்னையில் இறங்கும் அவர்கள் மின்சார ரயில் மூலம் வண்டலூர் வனவிலங்கு சரணாலயம் சென்று, அங்கே பகல் முழுவதும் மிருகங்களை பார்த்துவிட்டு, அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில் மூல மாக எக்மோர் வந்து அங்கிருந்து முத்து நகர் எக்ஸ்பிரஸில் தூத்துக்குடி திரும்புகிறார்கள்.
மாணவர்களின் கனவை நிறைவேற்ற தலைமை ஆசிரியர் தனி ஒருவர் சுமார் 1.50 லட்சம் செலவு செய்து தனது மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களை அழைத்துக்கொண்டு விமானத்தினையும், ரயில் போக்குவரத்தினையும், வனவிலங்கு சரணாலயத்தையும் பார்க்க நடவடிக்கை எடுத்து இருப்பது, மிகச்சிறப்பான செயலாகும். இவரை பிள்ளைகளின் பெற்றோரும், பண்டாரம் பட்டி ஊர் மக்களும் பாராட்டி மகிழ்கின்றனர்.