நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள அப்துல் கலாம் நற்பணி மன்றத்தின் சார்பில் உலக தண்ணீர் தின நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற மரக்கன்றுகள் நடும் விழா சேந்தமங்கலம் ஏரிக்கரையில் நண்பர் குழு ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமையில் பணி நடைபெற்றது.
உலகம் வெப்பமாதலை தடுப்பதற்காகவும், எதிர்கால சந்ததியினர் பயன்படும் வகையில் அப்துல் கலாம் நற்பணி மன்றத்தின் சார்பில் வேம்பு, ஆலமரம், புங்கை, புளி ஆகிய மரங்களின் கன்றுகள் நடப்பட்டன. சுமார் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை இந்த இயக்கத்தின் நிர்வாகிகள், பள்ளி மாணவர்கள் நட்டனர்.
இந்த நிகழ்வில் அப்துல் கலாம் நண்பர் குழு நிர்வாகிகள் வெங்கடேஷ், ராஜா, சூர்யா, ஜெகன், முத்துசாமி மற்றும் சிறுவர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.