அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் வளாகத்தில் உள்ள கட்டமைப்பியல் துறையில் ஸ்ட்ரெஸ் ‘25 என்ற தலைப்பில் மாணவர் மன்ற கருத்தரங்கு கட்ட மைப்பியல் துறையின் ஆமெசாக் ‘90 என்ற அரங்கில் துவங்கியது. இவ்விழாவிற்கு பொறியியல் புல முதல்வர் டாக்டர் கார்த்திகேயன் தலைமை வகித்து உரையாற்றினார்.
இவ்விழாவின் மாணவர் மன்ற செயல்பாடுகளின் தொகுப்பிதழை வெளி யிட்டார். இதில் சிறப்பு பேச்சாளராக எல் அண்ட் டி கட்டுமான நிறுவனத்தின் மேலாளர் பொறியாளர் நாகராஜன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் முன்ன தாக துறைத் தலைவர் டாக்டர் குமரன் வரவேற் புரை வழங்கினார். இவ் விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் கட்டமைப்பு துறை மாணவர் மன்ற ஆலோசகர்கள், பேராசிரியர்கள் ,டாக்டர்கள் பழனி,பொன் பால்சன், மாணவர் மன்ற தலைவர் சர்வேஷ் குப்தா மற்றும் பொதுச் செயலாளர் ஜான் கிளாஸ் டன் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.
இக்கருத்தரங்கிற்கு ஏறக்குறைய 50 மாணவ மாணவிகள் பல கல்லூரிகளில் இருந்து வந்து கலந்து கொண்டு ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். விழாவின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப் பட்டது இவ்விழாவினை மாணவர்கள் ஹரிபாலன் மற்றும் தனுஷா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.