fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு வேளாண் பல்கலையில் ஒரு நாள் தொழில்முனைவோர் பயிற்சிப் பட்டறை

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் ஒரு நாள் தொழில்முனைவோர் பயிற்சிப் பட்டறை

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஈ-யுவா மையம் வேளாண் பல் கலையின் பிரிவு 8 நிறுவனமான காஸ்பிட் டுடன் இணைந்து மார்ச் 29 அன்று டீப் டைவ் இன்டு பிசினஸ் மாடல் கேன்வாஸ் என்ற தலைப்பில் ஒரு நாள் தொழில்முனைவோர் பயிற்சிப் பட்டறையை நடத்தியது.

பிசினஸ் மாடல் கேன்வாஸ் என்பது தொழில்முனைவோராக விரும்பும் ஒவ்வொரு நபரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான கருவியாகும். தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட்டப் தமிழ் நாடு துணைத் தலைவர் தினேஷ் குமார் சுந்தரவேலு, பிசினஸ் மாடல் கேன்வாஸ் கருவியின் பகுதியைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து இருபது மாணவர்கள் இந்த பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் பட்ட றையின் கற்றல்களுடன், தங்கள் வணிக யுக்தி களை புகுத்தி நூதன விதை வீரியம் ஏற்றும் முலாம் பூச்சு ‘பயோ கோல்ட்’, உலர் பூச்செண்டு எவர்ப்லூம்‘ மற்றும் பாரம் பரிய அரிசிமாவு சார்ந்த மிட்டாய் ‘ஹெல்த்தி பைட்ஸ்’ போன்ற சில சுவாரஸ்யமான தயாரிப் புகளை முன் மொழிந்தனர்.

பயிற்சியின் தொடக்கத் தில், பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஈ. கோகிலா தேவி பங்கேற்பாளர்களை வரவேற்றார். மூத்த பேராசிரியர் முனை வர் எஸ். மோகன்குமார் தொடக்க உரை நிகழ்த்தி னார். பேராசிரியர் மோகன் குமார் தனது தொடக்க உரையில், நேச்சுரல்ஸ், கீரைக்கடைகாம், டீ பாய் பிரான்சைஸ் போன்ற அன்றாட வாழ்வில் நாம் காணும் ஏராளமான வெற்றிகரமான தொழில் முனைவோரை மேற்கோள் காட்டி, மாணவர்களை புதுமையாக சிந்திக்கவும், தொழில்முனைவோரின் பாதையில் நம்பிக்கையுடன் முன்னேறவும் ஊக்கப்படுத்தினார்.

பேராசிரியர் மற்றும் தலைவர் (தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தக வலியல் துறை) முனைவர் எல்.அருள் அவர்கள் நன் றியுரை ஆற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img