ஈரோடு ரங்கம்பாளையம் ஆர்ஏஎன்எம் கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா (கல்லூரி பேரவை, தமிழ் பேரவை நிறைவு விழா மற்றும் விளையாட்டு விழா) நடைபெற்றது. இதில் கல்லூரி தலைவர் ராஜமாணிக்கம் செயலாளர் பாலுசாமி, பொருளாளர் விஜயகுமார், நிர்வாகிகள் அருண்குமார், என்.முருகேசன், மாணிக்கம், ராஜேந்திரன், ரவிச்சந்திரன், கல்லூரி முதல்வர் பழனியப்பன் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக எம்.ஸ்டுடியோ நிறுவனர் மற்றும் நடிகர் மகி தங்கம், பன்னாட்டு குத்துச்சண்டை வீரர் சரவணன் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.