நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, குமாரபாளையம் சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சார்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உள்ளனர்.
நாமக்கல் வழக்கறிஞர்கள் சங்கம், குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் என்ற வகையில் செயல்பட்டு வருகின்றன.
ஓராண்டு பதவி அடிப்படையில், நாமக்கல் வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். அந்த வகையில், 2025-26 ஆம் ஆண்டு க்கான நிர்வாகிகள் தேர்தல் அண்மையில் நடைபெற்றது.
இதில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக பிரபாகரன், செயலாளராக அசோக், பொருளாளராக யுவராஜ், இணைச் செயலாளராக நித்தியானந்த தீபன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
அதில், நிர்வாகிகள் உறுதி மொழியை ஏற்றுக் கொண்டு, வழக்கறிஞர்கள் சங்க செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினர்.
நாமக்கல் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் அய்யாவு புதிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து உரையாற்றினார். இந்த நிகழ்வில் மூத்த வழக்குரைஞர்கள் பழனிசாமி, ரகுபதி, அன்பழகன், சக்கரவர்த்தி, குணாநிதி, மோகன்ராஜ், ராஜவேல், அன்பரசு, செல்வராணி, அமுதவல்லி, அகிலாண்டேஸ்வரி மற்றும் நீதிமன்ற பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.