fbpx
Homeபிற செய்திகள்பச்சிளம் குழந்தைக்கு கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சை செய்து காவேரி மருத்துவமனை சாதனை

பச்சிளம் குழந்தைக்கு கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சை செய்து காவேரி மருத்துவமனை சாதனை

நான்கு மாதங்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தைக்கு சிக்கலான கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சையை வடபழனி காவேரி மருத்துவமனை வெற்றிகரமாக செய்திருக் கிறது.

முன்னதாக கல்லீரல் செயலிழப்பு, கடுமையான மஞ்சள் காமாலை ஆகிய பாதிப்புகளுக்கு வழி வகுத்த ஒரு அரிதான மரபணு கோளாறு இந்த குழந்தைக்கு இருந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, வடபழனி காவேரி மருத்துவமனைக்கு 3.5 கிலோ. உடல்எடை கொண்ட இக்குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் அழைத்து வரப்பட்டிருந்தது.

தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரின் உடல் நலக் காப்பீடு
திட்டத்தில் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது.

சுமார் 110 கிராம் எடையுள்ள தாயின் கல்லீர லின் ஒரு பகுதியானது, அவரது குழந்தைக்கு வெற்றிகரமாக மாற்றிப் பொருத்தப்பட்டது.
இம்மருத்துவமனையின் கல்லீரல் மற்றும் பல்வேறு உறுப்புகளுக்கான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறையின் இயக்குனர் டாக்டர். சுவாமிநாதன் சம் மந்தம் தலைமையிலான மருத்துவர்கள் குழுவால் லேப்ராஸ்கோப்பிக் உதவியு டன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது தாயும், குழந்தையும் நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றனர்.
இது குறித்து டாக்டர். சுவாமிநாதன் சம்பந்தம் பேசுகையில், “இந்த வெற்றி யினை சாத்தியமாக் குவதற்கு எங்களது குழுவினர் தளர்வின்றி, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியிருப்பது பெருமிதம் அளிக்கிறது” என்றார்.

காவேரி மருத்துவம னைகள் குழுமத்தின் செயலாக்க இயக்குனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “மேம்பட்ட சிகிச்சை களை சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்வு நேர்த்தியாகப் பிரதிபலிக்கிறது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img