fbpx
Homeபிற செய்திகள்கோயம்புத்தூர் டிராவல் ஏஜெண்ட் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

கோயம்புத்தூர் டிராவல் ஏஜெண்ட் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

கோயம்புத்தூர் டிராவல் ஏஜெண்ட் அசோசியேஷன் தனது 5வது பதவியேற்பு விழா அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடத்தியது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய வாணிக மற்றும் தொழில்துறை மண்டலத் தலைவர். ராஜேஷ் பி லுண்டு மற்றும் கொடிசியா தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து டிராவல் ஏஜெண்ட் அசோசியேஷன் தலைவராக செல்வராஜு, செயலாளராக விஷ்ணு வசந்த் குமார், மற்றும் பொருளாளராக பிரஜேஷ் ஆகியோர் புதிய நிர்வாக குழுவில் பொறுப்பேற்றனர். மேலும், செயற்குழு மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர்களும் அறிவிக்கப் பட்டனர்.

சிறப்பு விருந்தினராக ராஜேஷ் பி லுண்டு கூறியதாவது:
“பயணத் துறை என்பது, பொரு ளாதாரத்தை தூண்டிவைக்கும் சக்தியாகவும், பண்பாட்டு பரிமாற்றத்தை ஏற்படுத்தும் பாலமாகவும் இருக்கிறது. டிராவல் ஏஜெண்ட் அசோசியேஷன் போன்ற அமைப்புகள் இந்த துறையில் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன, என்றார்.

கொடிசியா தலைவர் கார்த்தி கேயன் கூறுகையில், “நவீன தொழில்நுட்பங்களை பயண சேவைகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் மட்டுமே பயணத் துறையில் நிலைத்த வளர்ச்சி சாத்தியமாகும். இந்த புதிய நிர்வாகம் அந்த பாதை யை நோக்கி உறுதியுடன் செல் வது பாராட்டத்தக்கது, என்றார்.

படிக்க வேண்டும்

spot_img