ஜி.கே.என்.எம். மருத்துவமனை, இந்திய பிராச்சி தெரபி சங்கத்துடன் இணைந்து மகளிர் மருத் துவ சிகிச்சைக்கான பிராச்சிதெரபி முறைகள் குறித்த இரண்டு நாள் தேசிய அளவிலான பயிலரங்கினை ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் நடத்தியது.
இந்நிகழ்ச்சிக்கு தேசிய அளவில் புகழ்பெற்ற பேச்சாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் தலைமை தாங்கினர். ஒவ்வொருவரும் மகளிர் புற்றுநோய் சிகிச்சையின் நடைமுறைகள் மற்றும் நோயாளிகள் குணமடை தல் ஆகியன குறித்து பேசி னர். இந்த பயிலரங்கில் இத்துறையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் அதிநவீன சிகிச்சை முறைகள் குறித்து கதிர்வீச்சு புற்றுநோய் மருத்துவ மாணவர்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள தேவையான உத்வேகத்தினை அளித் திடும் வகையில் பயிலரங் கம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தலைமை செயல் அதிகாரி டாக்டர். ரகுபதி வேலுசாமி, புற்று நோய் துறை தலைவர் டாக்டர்.சிவனேசன், தலைமை கதிரியக்க புற்றுநோய் மருத்துவர் கார்த்திகா சிவபிரகாசம், ஸ்ரீனிவாசன், ஐ.பி.எஸ் அமைப்பின் பொருளாளர், டாக்டர்.தயாளன் குப்பு சாமி என பலர் கலந்து கொண்டனர்.