ஆரோக்கியமான சமூகத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைப் கல்லூரி உலக சுகாதார தினத்தைக் குறிக்கும் வகையில் வேடிக்கை மற்றும் உடற்பயிற்சி நிறைந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்விற்கு நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் பி.அல்லி ராணி தலைமை தாங்கினார்.
தொழில்முறை ஏரோபிக்ஸ் பயிற்சியாளரும் நிகழ்வின் தலைமை விருந்தினருமான பி.ஆனந்த் குமார், உடற்பயிற்சி, நடனம் மற்றும் வேடிக்கை ஆகியவற்றை இணைத்து ஒரு ஈர்க்கக்கூடிய அமர்வை வழிநடத்தினார். மாணவர்களும் ஆசிரியர்களும் உற்சாகமாகப் பங் கேற்றனர்.
இந்த கொண்டாட்டம் ஆரோக்கியமான வளாக சூழலை வளர்ப்பதற்கான கல்லூரியின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தவும் உதவியது.