சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் சாதனையாளர்கள் தின விழா கடந்த 8ம் தேதி அன்று நடைபெற்றது.
விழாவில் பல்கலைக் கழகத்தின் வேந்தர் முனைவர் மரியஜீனா ஜான்சன், தலைவர் முனைவர் மரிய ஜான்சன், துணைத் தலைவர்கள் அருள் செல்வன், மரிய பெர்னதெத் தமிழரசி, மரிய கேத்ரின் ஜெயப்ரியா ஆகியோர் முன்னிலை வகித்து, 2025 ஆம் ஆண்டின் வேலைவாய்ப்பு முகாமில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி சிறப்பித்தனர்.
இந்தாண்டு வேலைவய்ப்பு முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் உருவாக்கம், ஆலோசனை, நிதி மேலாண்மை, செயல் திட்டங்கள், விற்பனை மற்றும் விளம்பரத் துறைகளில் இருந்து வந்த நிறுவனங்கள், மொத்தமாக 3120 பணி நியமன ஆணைகள் வழங்கின.
இதில் 91.87% மாணவர்கள் வெற்றிகொண்டு உயர்ந்த ஊதியத்துடன் (உச்ச ஆண்டு ஊதியம் ரூ.41.20 லட்சம், சராசரி ஆண்டு ஊதியம் ரூ.5.45 லட்சம்) பணி அமர்த்த ப்பட்டுள்ளனர். பல்வேறு புது நிறுவனங்களில், மாணவர்களுக்கு விரும் பத்தக்க பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகத்தின் உயர்கல்வி ஆலோசனை குழுவின் வழிகாட்டுதலின் மூலம் 216 மாணவர்கள், அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அயர்லாந்து, கனடா, ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற முன்னணி நாடுகளின் பிரபல கல்வி நிறுவனங்களில் மேற் படிப்புக்காக பயணிக்க உள்ளனர். இந்தியா விற்குள்ளும் பெயரெடுத்த பல்கலைக்கழகங்களில் அவர்கள் தங்கள் கல்வியை தொடரவுள்ளனர்.
வேலை வாய்ப்பில் வெற்றி யடைந்த மாணவர்களுக்கு மட்டுமின்றி, கல்லூரியில் புதிதாக சேரும் மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உற்சாகம் தரப்பட் டது. மாணவர்களின் முயற்சிகளுக்கும், ஆசிரியர்களின் வழிகாட்டலுக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டன.
இந்த விழா, மாணவர்களின் கனவுகளுக்கு நிஜ உருவம் கொடுக்க, பல்கலைக்கழகம் எடுத்து வரும் முனைப்புகளின் சாட்சி. பணியிடம், மேற்படிப்பு, ஆராய்ச்சி, தொழில்முனைவு என அனைத்து துறைகளிலும் மாணவர்கள் தங்களின் திறமையை நிரூபிக்க இந்த விழா ஒரு பெரும் உந்துதலாக அமைந்துள் ளது.