fbpx
Homeபிற செய்திகள்சமத்துவ நாள் விழாவில் நலஉதவிகள் வழங்கி அமைச்சர் முத்துசாமி பேச்சு

சமத்துவ நாள் விழாவில் நலஉதவிகள் வழங்கி அமைச்சர் முத்துசாமி பேச்சு

ஈரோடு திண்டலில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சமத்துவ நாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் அமைச்சர் முத்துசாமி பேட்டி:
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக கொண்டாடப்பட வேண்டும் என அரசு ஆணை வெளியிட்டு அதனை திமுகவும் கொண்டாடி வருகிறது இந்த நாளில் 323கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50ஆயிரம் பேர் பயன் பெறும் வகையில் நலத் திட்ட உதவிகள் வழங் கப்பட்டன

அம்பேத்கர் வகுத்து கொடுத்த சமத்துவத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண் டும் என முதல்வர் செய்து வருகிறார். 2663 பேருக்கு 14கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. அதே போல பல திட்டங் களை முதல்வர் செய்து வருகிறார். தோழியர் விடுதி நிதிநிலை அறிக்கையில் ஈரோடு மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை விடுபட்டவருக்கு மீண்டும் வழங்க துணை முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மத்திய அரசால் ஏதேனும் ஏற்படும் பிரச்சனைக்கு உடனடியாக முதல்வர் குரல் கொடுத்து வருகிறார்.

ஆளுநர் பேச்சை மக்கள் விரும்பவில்லை, ஆளுநர் பேச்சை விரும்பு வர்கள் கூட தனிப்பட்ட முறையில் வேறு இடத்தில் ஆளுநர் பேசி இருக்கலாம் என்று சொல்கிறார்கள். எனவே பொதுவான இடத்தில் அப்படிப்பட்ட கருத்துக்களை சொல்லி இருக்க கூடாது என்பது தான் அனைவருடைய உணர்வாக உள்ளது. அதுவும் அவ்வளவு உயர்ந்த இடத்தில் இருப்பவர் சொல்வது சரியில்லை.

இன்றும் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது என்று பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது மாறுபாடுகள் பெரிய அளவில் மாற்றமடைந்து இருக்கிறது. எங்காவது ஒன்று இரண்டு இருந்தால் அந்த தவறை சரி செய்ய நிச்சயமாக அரசு நடவடிக்கை எடுக்கும் எங்களுக்கு தெரிந்து இப்போது தீண்டாமை பார்ப்பது இல்லை. தனிப்பட்ட முறையில் உணர்வுகள் என்றோ தூக்கி எறியப்பட்டு எல்லோரும் ஒன்று தான் என்று மக்களே விழிப்புணர்வு பெற்று இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img